கடந்த அரசாங்க காலத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் கடமையாற்றிய அதிகாரியொருவர் விரையில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லஞ்ச ஊழல் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளார். இப்பிரிவின் விசாரணைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையிலும் குறித்த அதிகாரியின் பெயர் மேலெழுந்துள்ளது. குறித்த நபர் சேகரித்த மோசடிப் பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுத்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

