தமது சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அரசசேவை முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் யூ. பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தமது சங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரைத் தெளிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டபோதும், தற்போதுவரை தீர்வைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
இந்த நிலையில், தமது சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால், நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக காரியாலயங்களின் பணிகள் முடங்குவதற்கு இடமுள்ளதாகவும் அரசசேவை முகாவைத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், ஆட்பதிவுத் திணைக்களம், வாகன பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் ஆகியவற்றிலும் தமது பணியாளர்கள் பெருமளவில் பணி புரிகின்றனர்.
இந்த நிலையில், குறித்த அனைத்து நிறுவனங்களின் பணிகளிகலிருந்து விலகினால், நாட்டில் பாரிய அசௌகரிய நிலைமை ஏற்படும் என்றும் யூ. பலிஹவடன தெரிவித்துள்ளார்.

