அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பரிசுக்கு செல்ல வுள்ளார். இத்தகவலை அவரே அறிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் 11 ஆம் பரிசுக்கு வருகை தர உள்ளார். முதலாம் உலகப்போரின் இறுதி நாளாக நவம்பர் 11 ஆம் திகதி பரிசில் இடம்பெற உள்ள நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கும் போது, ‘நவம்பர் 11 ஆம் திகதி உலகப்போரின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள பரிசுக்கு செல்கின்றேன்!’ என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வொஷிங்டன் நகரில் இடம்பெற இருந்த இதே அஞ்சலி நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை நிகழ்வில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இம்மானுவல் மக்ரோன் அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

