இன்று சனிக்கிழமை ஓகஸ்ட் 18 ஆம் திகதி, நாட்டின் அனைத்து வீதிகளிலும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதி கண்காணிப்பாளர்களான Bison Futé இத்தகவலை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை நிறைவுக்கு வருவதை ஒட்டி, இன்று சனிக்கிழமை சுற்றுலாப்பயணிகள் வீடு திரும்வுவார்கள் என தெரிவிக்கப்பட்டு, உள்வரும் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக A7 சாலை, A62 சாலை, A61 மற்றும A9 ஆகிய சாலைகளில் மிக நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளை ‘சிவப்பு’ எச்சரிக்கை நாளாக பிரகடனப்படுத்தி உள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமையே இந்த போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்தது. நேற்றைய நாளை பச்சை நிற எச்சரிக்கையாகவும், அதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை Auvergne-Rhône-Alpes உள்ளிட்ட ஒரு சில பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் ஏனைய பகுதிகளுக்கு பச்சை நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
