அமெரிக்காவினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு மத்தியில் தாம் எப்போதும் துருக்கியுடன் இருப்பதாக கட்டாரும் ஜேர்மனியும் அறிவித்துள்ளது.
ஜேர்மன் அதிபர் அன்ஜெலா மாகெல் உடன் கட்டார் அமீர் அல் தானி தொலைபேசியில் துருக்கி விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, துருக்கிக்கு ஆதரவு வழங்குவதென இரு தலைவர்களும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
துருக்கி பாதுகாப்புப் பிரிவு அமெரிக்க மதகுருவை கைது செய்தமைக்காக, அமெரிக்கா துருக்கியின் மீது பல தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தடையினால் துருக்கியின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

