நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நாடுபூராவும் உள்ள காணியில்லாத மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (16) இரத்தினபுரியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று முதல் ஆரம்பமாகும் இந்த திட்டம் அடுத்த வாரம் வரை முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் இதற்காக 10 இலட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் எமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காணி உறுதி வழங்கும் திட்டம் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவுடன் பல மாவட்டங்களில் காணி உறுதி வழங்க இருக்கிறோம்.
அடுத்த நிகழ்வு, நாளை(17) மொனராகலையிலும் 18 ஆம் திகதி கேகாலையிலும் 21 ஆம் திகதி காலியிலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

