ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் 18 வயதுக்கு குறைவாக இருக்கும் என குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், 67 பேர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
