நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு சில மாவட்டங்களில் மக்களுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கப்படவுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.இதற்கமைய ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி இரத்தினபுரியிலும், 17ம் திகதி மொனராகலையிலும், 18ம் திகதி மாத்தறையிலும் 19ம் திகதி கேகாலையிலும், ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி காலி மாவட்டத்திலும் உள்ள மக்களுக்கு காணி உரிமம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் மூன்றாண்டு நிறைவை எண்ணி மகிழ்ச்சியடைவதாக சுகாதார, போசாக்கு மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

