முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் கோடை விடுமுறையைக் கழிக்க Brégançon தீவின் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகின்றார். இந்நிலையில் அவர் சிறிய இயந்திர மோட்டார் படகில் பயணித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மக்ரோன் மற்றும் பிரிஜித் மக்ரோன் தம்பதியினர் ஓய்வெடுத்து வரும் Brégançon தீவில் முன்னதாக சிறியரக கமரா (Phantom) ஒன்று பறந்து வட்டமடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பிரிஜித் மக்ரோன் jet-ski படகில் கடலில் பயணிக்கும் புகைப்படங்கள் கசிந்துள்ளன. jet-ski படகை திறமையாக இயக்கும் நபர் ஒருவரும், அவரின் பின்னால் பிரிஜித் மக்ரோனும் வேகமாக செலும் புகைப்படமே வெளியாகியுள்ளது.
பிரபலங்களை பின் தொடரும் ஊடகங்கள் மக்ரோன் தம்பதியினரையும் விட்டு வைக்கவில்லை. முன்னதாக மக்ரோன் தனது சொந்த ஊரில் துவிச்சக்கரவண்டி பயணம் மேற்கொண்ட போது அதன் புகைப்படங்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதியில் இருந்து மக்ரோன் தம்பதியினர் இங்கு ஓய்வெடுத்து வருகின்றனர். தவிர அவர்களுடன் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயும் ஓய்வெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

