கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தியதலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ அக்கடமியில் பயிற்சியை மேற்கொள்ளும் 58 கெடற் அதிகாரிகள் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இரு நாட்களைக் கொண்டதாக இந்த சுற்றுலா அமைந்தது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த கெடற் அதிகாரிகளை கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன சார்பாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான கேணல் நிஷாந்த திசாநாயக மற்றும் கேணல் ரவி பதிரனவிதான ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் சன்ன வீரசூரியவினால் இந்த கெடற் அதிகாரிகளுக்கு 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பாரிய பொறுப்புகள் தொடர்பான அறிவுறுத்தல்களை தெளிவூட்டினார். இதனைத்தொடர்ந்து கெடற் அதிகாரிகள் ஆனையிறவில் உள்ள ஹசலக காமினியின் நினைவு தூபியையும் சென்று பார்வையிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கெடற் அதிகாரிகளை யாழ் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி சார்பாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பதவி நிலை அதிகாரி வரவேற்றார்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு மற்றும் பொறுப்பையும், மக்களுக்கு வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் இராணுவம் மேற்கொண்ட முயற்சிகளையும் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் சமரச பொறிமுறையையும் யாழ் குடாநாட்டில் பின்தொடர்ச்சியற்ற சூழலில் முன்னெடுத்துச் செல்லுதல், தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
இந்த கெடற் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லிணக்கபுரம் வீடமைப்பு திட்ட கட்டடங்கள், யாழ்கோட்டை, அராலி நிலையம், பொன்னாலை கேணி, நகுலேஸ்வரம் கோயில் ஆகிய பிரதேசங்களை சென்று பார்வையிட்டனர்.
