அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சினால் நேற்று (14) முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக இவ்வாணைக்குழுவுக்கு இரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

