முல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார். முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் நேற்று தீக்கிரையாக்கப்பட்டது.
மீனவர்களின் பெறுமதியான 3 படகுகள், பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள், 8 வாடிகள் மற்றும 2 இஞ்சின்கள் உள்ளிட்ட தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் அந்த பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசியுள்ள ஜனாதிபதி,
“எதிர்வரும் 22ம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு இரு தரப்பினருடனும் பேசி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

