கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
அமைச்சர் கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அமைச்சரின் செயலாளர் குறித்த காணொளியை எடுத்துள்ளார்.
உடற்பயிற்சி செய்யும் போது அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு சவால் விடுத்துள்ளார்.
அதில், பொலிஸ் மா அதிபரின் கால் இரண்டில் ஒரு பகுதி தெரியவில்லை. அதை யாரே பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தலை மட்டுமல்ல, காலையும் தூக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, பொலிஸ் மா அதிபர் உடற்பயிற்சி செய்யும்போது அவரது காலை யாரே தூக்கி பிடிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னால் தலையையும் காலையும் ஒரே நேரத்தில் உயர்த்தி உடற்பயிற்சி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
