கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன.
கொல்லப்பட்ட ஆடுகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கு மேல் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸாரிடம் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவித்தனர்.
