யாழ்ப்பாணம் இருபாலையில் நேற்று நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கைச் சேர்ந்த ந.பிரசன்னா (வயது-27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து பிற்பகல் 4 மணியளவில் நடந்துள்ளது. எதிர்ப்புறமாக வந்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்தது என்று கூறப்படுகின்றது.
விபத்தின்போது பிறிதொரு மோட்டார் சைக்கிள் சாரதியும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

