இன்றும் நாளையும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடெங்கும் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி அணைகள் நிரம்பி உள்ளன. உபரி நீர் தமிழக்த்துக்கு திறந்து விடபடுகிறது. கேரளாவில் கடும் வெள்ளத்தினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “மத்திய அரபிக்கடலின் கிழக்குப் பகுதியும் வங்கக் கடல் பகுதியும் கொந்தளிப்புடன் உள்ளது. ஆகையால் கடலை ஒட்டிய பகுதிகளில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை கனமழை பெய்யக்கூடும்.
உத்தரகாண்டில் மிகவும் அதிக மழை பெய்ய வாய்புள்ளது. அத்துடன் தமீழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம். இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம், அசாம், மேலாயா, மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் கடல் பகுதிகளில் கனமழை அல்லது மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது” என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

