உதகையில் யானைகள் வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட 27 கட்டிடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படும் என ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உள்ளாட்சி, வருவாய், காவல்துறைகளை அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை களஆய்வு நடத்தப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

