பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான்,பதவியேற்பு விழா தேதி ஆகஸ்ட் 14 ல் இருந்து ஆக., 18 க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்திய பிரபலங்களின் பெயர் பட்டியலை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி மூத்த தலைவர் பைசல் ஜாவேத் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முதலில் தனது பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்க இம்ரான் கான் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது இந்த பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.
இதனால் தனக்கு நெருக்கமான சிலரை மட்டும் அழைக்க இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார். இந்தியாவில் தனது நெருங்கிய நண்பர்களும், பிரபல கிரிக்கெட் வீரர்களுமான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவஜோத் சிங் சித்து ஆகிய 3 பேரை மட்டும் அழைக்க உள்ளதாக பைசல் ஜாவேத் கூறியுள்ளார்.

