பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு அளித்து வந்த பயிற்சியை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச ராணுவ கல்வி மற்றும் தொழில் நுட்ப பயிற்சி மையம் பிரபலமானது. இங்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் சேர்க்கப்படுவது வழக்கம். இங்குள்ள தேசிய பாதுகாப்பு பல்கலை.,யின் கீழ் உள்ள ராணுவ பயிற்சி மையத்திலும் பாகிஸ்தானியர்களுக்கு கணிசமான இடம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் ஆண்டு முதல், ராணுவ பயிற்சி மையத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை சேர்ப்பதை நிறுத்த, டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது 2வது முறை தடை
1960 முதல் பாகிஸ்தானுக்கு பயிற்சி அளித்த அமெரிக்கா 1990ல் நிறுத்தியது. 2001 செப்., தாக்குதலுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானியர்களை சேர்த்து கொண்டது. இப்போது மீண்டும் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

