பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் சிறந்த பணிகளை மேற்கொண்டு, திருகோணமலை மாவட்ட மக்களுக்காக விரிவான சமூகப் பணிகளைச் செய்த மக்கள் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கியவருமான எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் ஞாபகார்த்தமாக கந்தளாய் நகர மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவருடைய உருவச் சிலை நேற்றுத் திறக்கப்பட்டது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைத்து, மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு முறைமைகளையும் தொலையியக்கி தொடர்பாடல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் மாவட்டத்திலுள்ள 160 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஐவருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது. கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாய சமூகத்திற்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சேருவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை தொகுதி அமைப்பாளர் ஆரியவதீ கலப்பத்தி, அருண சிறிசேன மற்றும் மாவட்ட அதிகாரிகளும் திருமதி எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன மற்றும் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

