நீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைவரும் நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டித்தொகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் மக்களின் நலன் கருதி தாமதப்படுத்தாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், வழக்குகள் சுயாதீனமான முறையில் நடாத்தப்பட வேண்டும்.
மேலும், நாட்டில் சகல நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளையும் அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும்“ பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

