ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரையில் ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
நேற்று (08) பிற்பகல் ரயில்வே ஊழியர்கள் திடீரென ஆரம்பித்த வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

