பொது பஸ் போக்குவரத்துச் சேவைக்கான பாதை அனுமதிப் பத்திரம் இல்லாமல் தேவையான எல்லாப் பாதைகளிலும் பொது மக்கள் போக்குவரத்துக்காக பஸ்களைப் பயன்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கும் விசேட அறிவித்தல் ஒன்றை நிதி அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ளார்.
அதேபோன்று, ரயில் போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள சீசன் டிக்கெட்டுக்களைப் பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் எனவும் அமைச்சர் அவ்வறிவித்தலில் கூறியுள்ளார்.
முன்னறிவித்தல் இன்றி ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பயணிகள் முகம்கொடுத்துள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த பணிப்பகிஷ்கரிப்புக்காக அரசாங்கம் தனது கவலையைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

