சிலாபம் பிரதேச சபையின் மாதம்பேயில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணியாற்றுகின்ற பணியாளர் ஒருவர் அந்த அலுவலகத்தில் களஞ்சியசாலை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று மாலை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சடலத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வென்னப்புவ, போதலேகம பிரதேசத்தைச் சேர்ந்த, சிலாபம் பிரதேச சபையின் களஞ்சியசாலை பொறுப்பாளராக பணியாற்றிய 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மதிய உணவின் பின்னர் உயிரிழந்த நபரை காணாததால் சக ஊழியர்கள் அவரின் கைத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது, களஞ்சியசாலை அறையில் இருந்து சத்தம் கேட்ட போதிலும், அழைப்புக்கு பதில் வழங்காமையினால் சக பணியாளர்கள் களஞ்சியாலைக்கு சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது அங்கு அறை ஒன்றில் அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பதை கண்ட பணியாளர்கள் மாதம்பே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்