முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 95 வயதில் தற்போது காலமானார்.கடந்த 11 நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிபட்ட வந்த அவர் தற்போது இயற்கை எய்தினார்.
1924 ஆம் ஆண்டு திருக்குவளையில் பிறந்து பின் திரைத்துறை பயணத்தில் ஈடுபட்டு கொடிகட்டி பறந்தவர்.மேலும் அவரது பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.பின் அரசியலில் கால் அடி எடுத்து வைத்து ஐந்து முறை தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றவர் என்ற பெருமையும் கொண்டவர் கருணாநிதி.
இவர் அரசியலில் நுழைந்து 50 ஆண்டு விழா கொண்டாட்டம் கொண்டாடிய நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளது தொண்டர்கள் மட்டும் மக்களிடையே பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியாகியதை அடுத்து மக்கள் முழுவதும் கதறி அழுதபடி கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

