வவுனியாவில் நேற்று முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளா னதில் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் வவு னியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வவுனியா, திருநாவற்குளம் வீதியில் பயணித்த முச்சக் கர வண்டி எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட்டபோது கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத் துக்குள்ளானது.
விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

