Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு முதலமைச்சின் மீது- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

August 7, 2018
in News, Politics, World
0

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அந்த வழக்கை விசா­ர­ணைக்கு ஏற்­றுக் கொள்­வது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று முடி­வெ­டுத்­தது. இதை­ய­டுத்து நாளைய தினம் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

வடக்கு மாகாண மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்­த­வர் பா.டெனீஸ்­வ­ரன். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அவ­ரைப் பதவி நீக்­கம் செய்­து­விட்டு புதிய அமைச்­ச­ரவை ஒன்றை நிய­மித்­தார்.

இதை­ய­டுத்து தன்னை அமைச்­ச­ர­வை­யில் இருந்து நீக்­கி­யமை சட்­டப்­படி செல்­லாது என­வும் தானே தொடர்ந்­தும் சட்­டப்­ப­டி­யான அமைச்­சர் என உத்­த­ர­வி­டக்­கோ­ரி­யும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தொடர்ந்­தார் டெனீஸ்­வ­ரன்.இந்த வழக்கை விசா­ரித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற அமர்வு வழக்­காளி கோரி­ய­படி அவர் தொடர்ந்­தும் அமைச்­ச­ரா­கப் பதவி வகிக்­கி­றார் என்று இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பித்­தது. டெனீஸ்­வ­ரன் வகித்த அத்­தனை அமைச்­சுக்­க­ளுக்­கும் டெனீஸ்­வ­ரனே தொடர்ந்­தும் அமைச்­ச­ரா­வார் என மன்று கட்­ட­ளை­யிட்­டது.

ஆனால் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்ட பின்­ன­ரும்­கூட டெனீஸ்­வ­ரன் தனது அமைச்­சுப் பொறுப்­பு­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எவை­யும் வடக்கு மாகாண சபை­யி­னால் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்த விட­யத்­தில் தனக்கு அமைச்­சர்­களை நிய­மிக்­கவோ விலக்­கவோ உரிமை இல்லை என்று நீதி­மன்­றம் தெரி­வித்­து­விட்­ட­தால் தான் டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ராக நிய­மிக்­கவோ ஏற்­க­னவே உள்ள அமைச்­சர்­க­ளில் ஒரு­வரை விலக்­கவோ நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்று முத­ல­மைச்­சர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

அத்­தோடு டெனீஸ்­வ­ரன் விட­யத்­தில் வடக்கு மாகாண ஆளு­நரே தவ­றி­ழைத்­தார் என்­றும் அவரே இந்­தப் பிரச்­சி­னை­யைச் சரி­செய்­ய­வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி வரு­கின்­றார்.

ஆளு­நரோ, நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய அமைச்­ச­ர­வையை அறி­விப்­ப­தற்கு ஏது­வாக அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைப் பரிந்­து­ரைக்­கு­மாறு முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்­ட­போ­தும் அவர் அத­னைச் செய்­யா­த­தன் கார­ண­மா­கவே இந்­தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை என்று கூறி வரு­கின்­றார்.

இப்­படி இரு தரப்­பி­ன­ரும் மாறி மாறிப் பந்­தைத் தள்­ளி­வ­ரும் நிலை­யில் நீதி­மன்ற உத்­த­ரவை அலட்­சி­யப்­ப­டுத்தி அவ­ம­ரி­யாதை செய்­தி­ருக்­கி­றார்­கள் என்று தெரி­விக்­கும் வழக்கை டெனீஸ்­வ­ரன் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­க­வும் தனது அமைச்­சுப் பொறுப்­புக்­க­ளைக் கைவ­சம் வைத்­தி­ருக்­கும் இரு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருக்­கி­றார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான சிவ­நே­சன், அனந்தி ஆகி­யோர் மீதே குறித்த வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. எனி­னும் டெனீஸ்­வ­ர­னின் அமைச்­சுப் பதிவி தொடர்­பில் இடம்­பெ­றும் வழக்கு நாளை­ய­தி­னம் மன்­றில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தால் அன்­றைய தினமே நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கும் எடுத்­துக் கொள்­ளப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

நீதிச் சேவையுடன் ஏனைய துறைகளை ஒப்பிட முடியாது

Next Post

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமை

Next Post
நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமை

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures