Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞர்களின் செயற்பாட்டால் -இராணுவம் நிலைகொள்கின்றது

August 6, 2018
in News, Politics, World
0

வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்­டும் என்று நாம் தொடர்ச்­சி­யா­கக் கோரி வரும் நிலை­யில், தற்­போது இளை­ஞர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரைத் தொடர்ச்­சி­யாக நிலை ­நி­றுத்­தும் வகை­யில் உள்­ளன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

புத்­தூர் கிராம சபை­யின் முன்­னாள் உப தலை­வர் அரி­ய­குட்­டி­யின் உரு­வச்­சிலை திறப்­பும் நூற்­றாண்டு நாள் நிகழ்­வும் ஆவ­ரங்­கால் ஆத­வன் மண்­ட­பத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்­றது. அதில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
எமது இளை­ஞர்­கள் போதைப் பொருள் பாவனை, மது எனச் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். வாள்­வெட்­டுப் போன்ற சமூக விரோ­தச் செயல்­க­ளி­லும் ஈடு­ப­டு­கின்­ற­னர். பொலி­ஸா­ரும் அவற்­றைக் கட்­டுப்­ப­டுப்­ப­டுத்­தாது அச­மந்­த­மாக உள்­ள­னர்.

இவற்­றைச் சுட்­டிக்­காட்­டும் சிலர் இரா­ணு­வம் இங்கு தொடர்ந்­தும் நிலை கொள்ள வேண்­டும் என்று கூறு­கின்­ற­னர். எமது இளைய சமூ­கம் சிந்­தித்­துச் செய­லாற்­றா­விட்­டால் இரா­ணு­வத்­தி­னரை அகற்ற முடி­யாத நிலை­மையே ஏற்­ப­டும் – என்­றார்.

நிகழ்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் உரை­யாற்­றி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது, எமது சமூ­கத்­தின் மீது தற்­போ­தும் அடக்­கு­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளது. அதற்கு எதி­ராக எமது சமூ­கம் போராட வேண்­டும். எம்­மில் பலர் பிர­தேச வேறு­பாடு பார்க்­கின்­ற­னர். அவ்­வா­றான பிரி­வி­னை­வா­தம் நீங்க வேண்­டும். அனை­வ­ரும் தமி­ழர் என்ற ரீதி­யில் ஒன்று பட வேண்­டும் – என்­றார்.

நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

Previous Post

இளை­ஞர் குழு அட்­ட­கா­சம்!!

Next Post

தந்தையின் இழப்புத் துயரைத் தாங்கியும் – பரீட்சை எழுதிய மாணவி!!

Next Post
தந்தையின் இழப்புத் துயரைத் தாங்கியும் – பரீட்சை எழுதிய மாணவி!!

தந்தையின் இழப்புத் துயரைத் தாங்கியும் – பரீட்சை எழுதிய மாணவி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures