Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்வியங்காட்டில் வீடான்றில் நள்ளிரவில் திருட்டு

August 6, 2018
in News, Politics, World
0

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் மர்ம முறையில் வீட்டினுள் உட்புகுந்து சிறுதொகை பணம் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் யோகநாதன் பூசனா தேவி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள வீட்டில் சனிக்கிழமை (04-08-2018) நள்ளிரவு 12.30 மணிக்கு திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் அனைவரும் உறங்கிய சமயத்தில் சமையலறையின் பின்புறமாக வைக்கப்பட்டிருந்த ஜன்னல் கதவு பலகைகளை கழற்றி வீட்டினுள் உட்புகுந்த திருடர்கள் சுவாமி அறையில் வைக்கப்பட்டிருந்த அலுமாரியில் தமது கைவரிசையை காட்டியதோடு சிறுதொகை பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.

மேலும் குறித்த வீதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலை 4.15 மணியளவில் இதே வீட்டுக்கு அருகாமையில் உள்ள சிவானந்தம் நிருஷா என்பவரின் வீட்டில் மற்றுமோர் திருட்டை மேற்கொள்ள திருடர்கள் முயற்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவங்கள் இரண்டும் ஒரே தரப்பினரால் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post

மன்னாரில் 15 வயது மாணவிக்கு அதிபர் செய்த காரியம்!

Next Post

இராதாகிருஷ்னனின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்

Next Post
இராதாகிருஷ்னனின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்

இராதாகிருஷ்னனின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures