மஹியங்கனை, ஹத்தத்தாவ கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் தாயும் இன்று (05) யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மஹியங்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்காக தாயுடன் சென்று கொண்டிருந்த போதே வீதி ஓரத்தில் இருந்த யானை இருவரையும் இவ்வாறு தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

