விகாரையொன்றுக்கு ஆஷீர்வாதம் பெறச் சென்ற தரம் 5 மாணவர்கள் 40 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம் பெற்றோருடன் அனுராதபுரம் பதவியா பகுதியிலுள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பொழுதே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களுடன் சென்ற 38 பெற்றோரும் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்நிலையில் குளவி கொட்டுக்கு இலக்கான அனைவரும் தற்போது பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்ச்சைப் பெற்று வருகின்றனர்.
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை (05) இடம்பெறவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

