Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாக்­கு­தல் நடத்­தி­யோரை கைது செய்ய நட­வ­டிக்கை

August 4, 2018
in News, Politics, World
0

முல்­லைத்­தீ­வுக் கட­லில் இடம்­பெ­றும் சட்­டத்துக்குப் புறம்­பான மீன்­பி­டி­யைத் தடுத்து நிறுத்­தும்­படி கேட்டு நடத்­தப்­பட்ட போராட்­டத்­தின்­போது அந்த மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சந்­தே­க­ந­பர்­க­ளின் பெயர்­களை நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தி­னர் தமது வாக்­கு­மூ­லத்­தில் கூறி­யுள்­ள­னர் என்­றும் அத­ன­டிப்­ப­டை­யில் அவர்­க­ளைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளில் பொலி­ஸார் இறங்­கி­யுள்­ள­னர் என்­றும் முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­தார்.

முல்­லைத்­தீவு மாவட்ட மீன­வர்­க­ளில் பெரும்­பா­ல­ன­வர்­கள் ஒன்­று­கூடி நேற்­று­முன்­தி­னம் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­திற்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டம் செய்­தார்­கள்.நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளைத் தம்­மு­டன் பேச­வ­ரு­மாறு அவர்­கள் அழைப்பு விடுத்­தி­ருந்­தார்­கள். அதி­கா­ரி­கள் நீண்­ட­நே­ர­மா­கி­யும் சந்­திக்க வரா­மை­யி­னால் பொலிஸ் தடை­யைத் தகர்த்­தெ­றிந்து உள்ளே புகுந்­தார்­கள். நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தின் ஜன்­னல்­கள் மீதும் கல் வீச்சு நடத்­தப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் மாவட்ட உத­விப் பணிப்­பா­ள­ரால் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் ஆரம்­பித்­தி­ருந்­தார்­கள். முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­வான் மன்­றில் நேற்று அறிக்கை தாக்­கல் செய்­தார்­கள்.

‘‘மாவட்ட உத­விப் பணிப்­பா­ள­ரால் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாட்­டில் பெயர் குறிப்­பிட்­டோரை முதல்­கட்­ட­மாக கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். குற்­ற­வி­யல் சட்­டத்­தின் ஆறு பிரி­வு­க­ளின் கீழ் இவர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டும். பொதுச் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்­தமை, அரச சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்­தமை, அரச வாக­னத்­தைச் சேதப்­ப­டுத்­தி­யமை, அரச ஊழி­யரை பணி­செய்­ய­வி­டா­மல் தடுத்­தமை, கல்­லால் எறிந்து ஊழி­ய­ருக்­குக் காயம் எற்­ப­டுத்­தி­யமை ஆகிய குற்­றங்­கள் சந்­தேக நபர்­கள் மீது சுமத்­தப்­பட்டு வழக்­குப் பதிவு செய்­யப்­ப­டும்’’ என்று பொலிஸ் அதி­காரி தெரி­வித்­தார்.

Previous Post

அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு விபரம்

Next Post

ரணிலின் தீர்வு ஏற்க்க முடியாதது – டிலான்

Next Post
ரணிலின் தீர்வு ஏற்க்க முடியாதது – டிலான்

ரணிலின் தீர்வு ஏற்க்க முடியாதது - டிலான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures