சேவாகம ஓனேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பி.ஹரிசன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது.
425 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டம் நேற்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 180 அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வு நேற்று ஆரம்பமானது .
2,000 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டம் 20 மாதங்களில் நிறைவு செய்யப்படவுள்ளது.
மேலும், பிரதேசத்தில் 250 குடும்பங்களுக்கு பயனளிக்கும் புதூர் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தல் புதூர் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையின் 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்தல் என்பன அமைச்சர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

