Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறையில் இருந்து தப்பிய கைதிகள் – 570 கி.மீ தொலைவில் வைத்து கைது!!

August 1, 2018
in News, Politics, World
0

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு Colmar சிறைச்சாலையில் இருந்து தப்பித்த இரு கைதிகள், 570 கிலோமீட்டர்கள் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு Colmar சிறைச்சாலையில் இருந்து 30 வயதுகளையுடைய இரு கைதிகள் தப்பிச்சென்றிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கழிவறையின் ஜன்னல்களை கைகளால் தயாரித்த ஆயுதங்களை பயன்படுத்தி திறந்து, அதன் வழியாக அவர்கள் தப்பிச் சென்றனர். அதைத் தொடர்ந்து குற்றவாளிகளை தேடும் படலம் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் இருவரும், 570 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள Roubaix (Nord) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற குற்றவாளிகளின் ஒருவனின் சகோதரி வீட்டில் வைத்து இருவரும், நேற்று மாலை 5.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது குற்றவாளியின் சகோதரி மற்றும் இரு பிள்ளைகள், கைதியின் தந்தை என பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஜூலை 1 ஆம் திகதி Réau சிறையில் இருந்து குற்றவாளி Redoine Faïd தப்பிச்சென்றிருந்தான். அதைத் தொடர்ந்து அதே மாதத்தில் இந்த இரு குற்றவாளிகளும் தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வியட்நாமில் சுற்றுலா பயணிகளை கவரும் தங்கப் பாலம்

Next Post

மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி:கிராமங்களுக்கும்

Next Post

மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி:கிராமங்களுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures