Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

August 1, 2018
in News, Politics, World
0
கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

யாழ்ப்­பா­ணம், வண்­ணார்­பண்ணை வட­கி­ழக்கு கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­யமை மற்­றும் கொக்­கு­வி­லில் 3 வீடு­க­ளுக்­குள் புகுந்து அடா­வ­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் நேற்று முற்­ப­டு­த்தப்­பட்­ட­ னர்.

சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை பாது­காப்­புக் கமரா காணொ­லிப் பதி­வு­கள் ஊடாக நிரூ­பிக்க முடி­யும் என யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் வழங்­கிய உறு­தி­மொ­ழியை அடுத்து சந்தேகநபர்களை எதிர்­வ­ரும் 3ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

கொக்­கு­வில் பிரம்­படி லேன், புது வீதி ஆகிய இடங்­க­ளி­லுள்ள 2 வீடு­க­ளுக்குள் புகுந்து அடா­வ­டி­யில் ஈடுப்­பட்­டார் என்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை நடந்­தது.வண்­ணார்­பண்ணை வட­கி­ழக்கு (ஜே/100) கிராம அலு­வ­ல­ரை அவ­ரது அலு­வ­ல­கத்­துக்­குள் புகுந்து மிரட்­டி­யமை – அவ­ரது அலு­வ­லக பொருள்­களை அடித்­துச் சேதப்­ப­டுத்­தி­யமை மற்­றும் கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அண்­மை­யி­லுள்ள வீடொன்­றுக்­குள் புகுந்து வானுக்குத் தீவைத்து அடா­வ­டி­யில் ஈடு­பட்­டமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக் க­ளில் ஒரு­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

நான்கு வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்­பி­லும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து இரு­வேறு வழக்­கு­க­ளின் கீழ் சந்­தே­க­ந­பர்­கள் இரு­வ­ரும், யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றில் மேல­திக நீதி­வான் வி.இரா­ம­க­ம­லன் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­ னர்.

“கொக்­கு­வி­லில் ஆவா குழு உறுப்­பி­னர் ஒரு­வ­ரின் வீட்­டுக்­குள் புகுந்து சந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வர் அடா­வ­டி­யில் ஈடு­பட்­டுள்­ளார். வீடு­க­ளுக்­குள் புகுந்து வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்ட 3 சம்­ப­வங்­க­ளும் இரண்டு குழுக்­க ­ளுக்­கி­டை­யி­லா­னவை” என்று பொலி­ஸார் மன்­று­ரைத்­த­னர்.

சந்­தே­க­ந­பர்­கள் மீதான குற்­றச்­சாட் டுக்­களை நிரூ­பிக்க முடி­யுமா? என்று மன்று கேள்வி எழுப்­பி­யது.
“சம்­பவ இடங்­க­ளுக்கு அண்­மை­யி­லுள்ள பாது­காப்­புக் கம­ராக்­க­ளின் காணொ­லிப் பதி­வு­கள் பெறப்­பட்­டுள்­ளன. அவற்­றில் சந்­தே­க­ந­பர்­கள் உள்­ள­னர். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்” என்று பொலி­ஸார் மன்­று­ரைத்­த­னர்.

பாது­காப்­புக் கமரா பதிவை எதிர் வரும் வெள்­ளிக்­கி­ழமை மன்­றில் முன்­வைக்க உத்­த­ர­விட்ட மேல­திக நீதி­வான், அன்­று­வரை சந்­தே­க­ந­பர்­களை விளக்­க­ம­றி­ய­லில் வைத்து வழக்கை ஒத்­தி­வைத்­தார்.

Previous Post

பொலிஸ் குழுக்­கள் களத்­தில்!!

Next Post

வெல்லவாய – கொடவெகரஹெலயில் காட்டுத் தீ

Next Post
வெல்லவாய – கொடவெகரஹெலயில் காட்டுத் தீ

வெல்லவாய – கொடவெகரஹெலயில் காட்டுத் தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures