யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு இலங்கை இராணுவத்தினரை அழைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் உறுப்பினர் லோகதயாளன், யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தினர் எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது என்று தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தினர் நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்று தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாக இருக்காது என்று உறுப்பினர் ரெமீடியஸ் தெரிவித்தார்.அரச தலைவர் செயலக நிகழ்வோ அல்லது தலைமை அமைச்சர் அலுவலக நிகழ்வோ எதுவாக இருந்தாலும் மேடை அமைக்கும் பணியிலிருந்து பெரும்பாலான பணிகளை இராணுவத்தினரே செய்கின்றனர்.
அரச நிலத்தில் அரச துறையை சார்ந்தவர்களை நிகழ்வு செய்யக் கூடாது என கோருவது பொருத்தமல்ல. மாநகர சபையின் நிகழ்வுக்கு அவர்களை அழைக்கமாட்டோம் என மாற்றியமைக்கலாம் என்று அவர் கூறினார்.

