இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று, இலங்கைக்கான
அமெரிக்கப் பதில் தூதுவர் ரெபேர்ட் ஹில்ரன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், பதில் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் அமெரிக்கப் பதில் தூதுவர் தனது கீச்சகத்தில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2015, 2017ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளேன் என்றுள்ளது.












