Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக பேசக்­கூ­டிய தகு­தி­யைப் பெண்­கள் பெற வேண்­டும்

August 1, 2018
in News, Politics, World
0
பெண்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக பேசக்­கூ­டிய தகு­தி­யைப் பெண்­கள் பெற வேண்­டும்

அர­சி­ய­லில் பிர­வே­சித்­துப் பெண்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக பேசக்­கூ­டிய தகு­தி­யைப் பெண்­கள் பெற வேண்­டும். பெண்­க­ளுக்கு அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த வேண்­டும். பொரு­ளா­தார சமத்­து­வத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும். அதற்கு பெண்­கள் கட்சி என்ற ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டும்.

இவ்­வாறு போரால் பாதிக்­கப்­பட்ட பெண்­கள் நேற்­றுக் கூட்­டாக வலி­யு­றுத்­தி­னர்.

மாகாண சபை­க­ளில் பெண்­க­ளின் பிர­தி­ந­தித்­து­வம் ஏன் அதி­க­ரிக்க வேண்­டு­மென்ற தொனிப்­பொ­ரு­ளில் பெண்­க­ளுக்­கான கலந்­து­ரை­யா­டல் ஒன்று நேற்று நடை­பெற்­றது. போரால் பாதிக்­கப்­பட்ட பெண்­கள் அமைப்­பின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பாண நக­ரப்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள விருந்­தி­னர் விடு­தி­யில் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.இதில் போரால் பாதிக்­கப்­பட்ட பெண்­கள் அமைப்­பின் தலைவி விசாகா தாம்­தாச அதில் கலந்து கொண்­டார். பெண்­க­ளின் பிர­தி­நித்­து­வம் ஏன் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும்?, தேர்­த­லில் பெண்­க­ளின் பங்­க­ளிப்­புக்­கள் போன்ற விட­யங்­கள் தொடர்­பில் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தார்.

நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லின் போது பெண்­க­ளின் பங்­க­ளிப்பு 23 வீத­மாக இருந்­தது. எதிர்­வ­ரும் காலங்­க­ளில் 50 வீத­மாக வழங்­கப்­பட வேண்­டும். ஆண்­க­ளால் 100க்கு 100 வீதம் அர­சி­ய­லில் பங்­க­ளிப்­புச் செய்ய முடி­யு­மெ­னின் ஏன் பெண்­க­ளால் 100க்கு 100 வீதம் பங்­க­ளிப்­புச் செய்ய முடி­யாது.

திரு­ம­ண­மா­ன­வ­ரா­யின் கண­வ­னின் அனு­ம­தி­யு­ட­னும், குடும்­பத்­தா­ரின் ஒத்­து­ழைப்­பு­ட­னும், அர­சி­ய­லில் பிர­வே­சிக்க வேண்­டும். பெண்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக பேசக்­கூ­டிய தகு­தி­யைப் பெற வேண்­டும். பெண்­கள் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த வேண்­டும். பொரு­ளா­தார சமத்­து­வத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும். அதற்­குப் பெண்­கள் கட்சி என்ற ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டும்.

வடக்கு மாகாண பெண்­கள் தமது பிரச்­சி­னை­க­ளை­யும், அர­சி­யல் பங்­க­ளிப்­யை­யும் முன்­னெ­டுக்க உரு­வாக்­கிய அமைப்­பின் ஊடாக இன்­னும் பெண்­கள் மத்­தி­யில் அர­சி­யல் ஆர்­வத்­தை­யும், பெண்­க­ளின் பாது­காப்பு மற்­றும் பிரச்­சி­னை­களை அறிந்து ஆராய்ந்து தீர்­வு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும் வகை­யில் அர­சி­ய­லில் பெண்­க­ளின் பங்­க­ளிப்­புக்­கள் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும்.

அதற்­கு­ரிய வாய்ப்­புக்­களை பெண்­க­ளுக்கு வழங்க ஆண்­கள் முன்­வர வேண்­டும், கட்­சி­கள் முன்­வர வேண்­டும் என்று கலந்­து­ரை­யா­ட­லில் கலந்து கொண்ட பெண்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

எதிர்­கா­லத்­தில் பெண்­கள் கட்­சி­கள் உரு­வாக்­கப்­பட்டு பெண்­க­ளின் பிரச்­சி­னை­கள் மற்­றும் பாது­காப்­புக்­களை உரிய முறை­யில் முன்­னெ­டுத்­துச் செல்­லும் வகை­யில் செய­லாற்ற பல நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டும். எதிர்­கா­லத்­தில் பெண்­க­ளின் விகி­தா­சா­ரம் அதி­க­ரிக்க நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்க வேண்­டு­மென்று தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­பட்­டன.

இந்த கலந்­து­ரை­யா­ட­லில் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் மற்­றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான பா.கஜ­தீ­பன், கேச­வன் சயந்­தன், அஸ்­மின் அயூப் க.சிவ­யோ­கன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு பெண்­க­ளின் பிர­தி­தி­நித்­து­வத்­தின் முக்­கி­யத்­து­வம் மற்­றும் பெண்­க­ளின் பங்­க­ளிப்­புக்­கள் தொடர்­பான தமது கருத்­துக்­க­ளை­யும் முன்­வைத்­தி­ருந்­த­னர். வடக்கு மாகா­ணத்­தை­கச் சேர்ந்த பெண்­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் அங்­கம் வகிக்­கும் பெண் பிர­தி­நி­தி­கள் எனப் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

Previous Post

யாழ்ப்பாணத்துக்கு மாறிய புதிய பெயர்

Next Post

25 மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன

Next Post

25 மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures