Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரில் தாய்,பிள்ளை என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் மீட்பு

July 30, 2018
in News, Politics, World
0

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று(30) திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றயை(30) மனித புதைகுழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் மற்றும் பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமுமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

-மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (30) காலை 43 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டது.மனித புதைகுழி அகழ்வின் போதும் சந்தேகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எலும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்களை அகற்றிய சந்தர்ப்பத்தில் அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கப்படுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் எந்த வித துல்லியமான கருத்துக்களும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் என மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமேரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு தாங்கள் முன் வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.தற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கணக்குகளை பாதுகாக்க வருகிறது கூகுளின் புதிய வன்பொருள் சாதனம்

Next Post

20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த மகேஷ்பாபு

Next Post
20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த மகேஷ்பாபு

20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த மகேஷ்பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures