பரிசைச் சேர்ந்த தீயணைப்புப்படை அதிகாரிகள் மீது மூன்று பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகியுள்ளது.
முதல் குற்றச்சாட்டு கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. உயர் அதிகாரி ஒருவர் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய இரண்டு குற்றச்சாட்டுக்களும் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பதிவாகியுள்ளன. Créteil நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது. Boulogne-Billancourt சேர்ந்த தீயணைப்பு படையினர் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தகவலை Le Monde பத்திரிகை வெளியிட்டுள்ளது. தவிர, இந்த குற்றம் மறைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
2008 ஆம் ஆண்டில், தீயணைப்பு படையினர் ஏழு பேர் இதே போன்ற ஒரு வழக்கில் கைது செய்யப்படிருந்தனர். அப்போது 15 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரெஞ்சு தீயணைப்புத்துறையில் 16 வீதமான பெண்கள் பணிபுரிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.












