இலங்கை மற்றும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை பார்வையற்றோர் கிரிக்கட் அணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கடந்த 15,16 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய பார்வையற்றோர்க்கான கிரிக்கட் போட்டிகளில் முதன் முறையாக இலங்கை வெற்றிபெற்றதுடன், அப்போட்டியில் இலங்கை அணி 02 புதிய உலக சாதனைகளை படைத்தது.
அந்த வகையில் பார்வையற்றோர் கிரிக்கட் வீரர் ஒருவர் ஹாட்ரிக் சாதனையை படைத்ததுடன், முழுமையாக பார்வையை இழந்த வீரர்கள் இருவர் ஆட்டமிழக்காது இணைப்பாட்டமாக 153 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

