கிளிநொச்சி புன்னை நீராவியில் உள்ள சிறு குளத்திலிருந்து இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட் டுள்ளது.
புன்னைநீராவி 26ஆம் வாய்க்காலைச் சேர்ந்த சுபாஸ் (வயது-–31) என்ற இளைஞனின் சடலமே தர்மபுரம் பொலிஸாரால் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதியில் இளைஞனைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையிலேயே சடலமாக இளைஞன் மீட்கப்பட்டுள்ளார்.சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

