ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்தல், கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழான சலுகைகளை உயர்த்துதல், என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை துரிதமாக்குதல் முதலான பல விடயங்கள் பற்றி பேசப்பட்டன.
இதில் மாகாண சபை தேர்தலை நடத்துவது பற்றியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துவெளியிட்டுள்ளார்.
இதற்கு அப்பால் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
