நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளியே இவ்வாறு வெளியிடப்படவுள்ளன. இந்த வருடத்தில் பரீட்சை எழுதியவர்களில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வடமேல் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள வைத்திய பீடங்களுக்கும் 75 மாணவர்கள் வீதம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அத்துடன், களனிப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள பொறியியல் கற்கைநெறிக்கும் 50 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

