2014ம் ஆண்டு அழுத்கம, தர்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரின் தலைமையில் தர்கா நகர் சாஹிரா கல்லூரியில் நாளை (26) பி.பி. 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட 122 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு 188 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

