Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பறிபோகிறது வவுனியா -மைத்திரியுடன் பேசுமாறு சம்பந்தருக்கு அவசர கடிதம்

July 25, 2018
in News, Politics, World
0

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருவதாகவும் இதனால் வவுனியாமாவட்டத்தின் இனப்பரம்பல் மாற்றமடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ள வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் இந்த நடவடிக்கை தொடருமானால் திருகோணமலை, அம்பாறை, மாவட்டங்களின் நிலைதான் வவுனியாவிற்கும் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில் உடனடியாக நாட்ன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுமாறு எதிர்க்கட்சிதலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகாவலி எல் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த ஆட்சியில் நன்கு திட்டமிட்ட வகையில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நடந்தேறியுள்ளன.
கி.சே.பிரிவு- கிராமம் -வாக்காளர் எண்ணிக்கை
வெடிவைத்தகல்லு வெகரதென்ன 25
பதவியபடிவம்-1 (கம்பிலிவெள) 94
போகஸ்வெள-1 495
போகஸ்வெள-2 137
கஜபாபுர 111
மொனரவெள 186
மாயாவெள 213
கல்யாணபுர-1 355
நாமல்புர 75
சதாஹரித்தகிராமம் 01
எத்தாவெட்டுனுவெள 747
நிக்கவெளஇடது சம்பத்கம 116
றணவிருகம 62
நிக்கவெளஇடது (இசுறுபுர) 07
நிக்கவெளஇடது (சங்கபோபுர) 00
நிக்கவெளஇடது 365
நிக்கவெளவலது நிக்கவெளவலது 598
சப்புமல்தன்ன 315

வவுனியா வடக்கில் மொத்தமாக இதுவரையில் 4083 வாக்காளர்களை உள்ளடக்கியதாக குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள கச்சல்மகிளங்குளம் எனப்படும் கைவிடப்பட்டகுளம் கடந்தவருடம் அனுராதபுர மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக் களத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டு குளத்திற்கு கீழாக காணப்படும் நீர்ப்பாசனக்காணிகள்குடியேற்றவாசிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இக்குளத்திற்குமிகவும்அண்மையிலுள்ள கொக்கச்சாங்குளம் எனஅழைக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீககாணிகள் கலாபோகஸ்வ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு வேறுமாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாபிரதேசசெயலகப்பரிவு

வவுனியா பிரதேச செயலகப் பரிவிலும் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளது. மருதங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிராமங்களில் 1005 வாக்காளர் உள்ளடங்கலாக குடும்பங்கள் குடியேற்றப்பட்டள்ளனர்

கி.சே.பிரிவு – கிராமம் – வாக்காளர்என்ணிக்கை
மருதங்குளம் நாமல்கம 194
சலலிகினிகம 264
நந்தமித்திரகம 547
மொத்தம் 1005

வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக இதுவரையில் 1005 வாக்காளர்களை உள்ளடக்கியதாக குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

செட்டிகுளம்பிரதேசசெயலகப்பரிவு

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளம் கிராம அலுவலர்பிரிவில் 151 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. செட்டிகுளம்பி.செ. பிரிவுக்குட்பட்ட கிராமமாக இருந்தபோதும் வவுனியா தெற்கு சிங்களபிரதேசசெயலாளர் பிரிவுக்குஉள்வாங்கப்பட்டுஅவர்களால் 151 குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்காக பட்டியல் தயாரிக்க ப்பட்டது. அத்துடன் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 40 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இவர்கள்அனைவரும் அனுராதபுரம் மாவட்டத்தில் வதியும் இராணுவக் குடும்பங்களாகும்.

பாவற்குளம் பாவற்குளம் 151 குடும்பம்

இதேபோன்று மாணிக்கம் பண்ணை (மெனிக்பாம்) பகுதியில் 2009ம் ஆண்டு இறுதியுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு பயன் படுத்தப்பட்ட இடைத்தங்கல்முகாம்அமைந்த 1089 ஏக்கர்காணியும்தற்போதுஇராணுவத்தின்கட்டுப்பாட்டில்உள்ளது.

இந்தகாணி அரசகாணியென்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் நீண்டகாலமாக செட்டிகுளம் பிரதேசமக்களால் பருவகாலப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டதாகும். எனினும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.

இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்பட்டபோது அனைத்து உட்கட்டுமான வசதிகளும் இப்பகுதியில் செய்யப்பட்டிருந்தது. (உள்ளகவீதிகள், மின்னிணைப்பு, கிண றுகள்) தற்போது இக்காணியின் ஒருபகுதியில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் நடாத்தப்படுகின்ற விலங்கு பண்ணை, விவசாய பண் ணைகள்நடாத்தப்பட்டுவருவதுடன்; இராணுவத்தினரால் உல்லாசவிடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்காணியில்பெருந்தொகையானசிங்களக்குடியேற்றம்செய்வதற்கானஏற்பாடுகள்நடைபெற்றுவருவதாகஅறியமுடிகின்றது. இதற்குமேலதிகமாக 146 ஏக்கர் பொது மக்களுடைய காணிகள்அரசபடைகளின்பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மல்வத்துஓயா (கீழ்மல்வத்துஓயாநீர்த்தேக்கதிட்டம்) இத்திட்டமானதுஅனுராதபுரம்-வவுனியா மாவட்டங்களினூடாக ஊடறுத்துபாயும் அருவியாற்றை மறித்து தந்திரிமலைபிரதேசத்தில்அணைக்கட்டொன்றைஅமைப்பதினூடாகஉருவாக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அனுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஒரு பகுதி காணிகளும், வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னசிப்பிக்குளம்கி.சே.பிரிவிலுள்ள 1430 ஹெக்ரேயர் காணியும் சுவீகரிக்கப்பட்டவுள்ளது. அத்துடன் 05 சிறியகுளங்களும்மேட்டுக்காணி 11ஏக்கர், வயற்காணி 625.75 ஏக்கரும்உள்ளடக்கப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று காணியாக முதலியார்குளம் கி.சே.பிரிவில் கப்பாச்சிகிராமத்தில் 1000 ஏக்கர்காணி ஒதுக்கி தருமாறு கீழ்மல்வத்து ஓயாதிட்ட பணிப்பாளரால் பிரதேச செயலாளருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 11 ஏக்கர்மேட்டுக்காணியும், 625.75 ஏக்கர்வயற்; காணியுமாக மொத்தமாக 636.75 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ள நிலையில் மாற்றுக் காணி வழங்குவதற்காக 1000 ஏக்கர்காணி பிரதேச செலாளரிடம் கோருவதன் நோக்கமென்ன.

அத்துடன்இதுவரையில்இத்திட்டம்தொடர்பான விடயங்கள் பிரதேசஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில்கலந்துரையாடப்படவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது. எனவே இதுதொடர்பில் அரசதலைவருடன் பேசிதிட்டமிட்ட வகையில் நடைபெறும் இனப்பரம்பலை பாதிக்கும் செயலினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு தங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மருதங்கேணியில் எவரும் கைது செய்யப்படவில்லை

Next Post

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நாளை இழப்பீடு

Next Post

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நாளை இழப்பீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures