தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரைதொடர்பில், கூடிய விரைவில் வியாக்கியானத்தை தருமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபருக்கு, மீண்டும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஞாபகமூட்டும் வகையிலேயே மேற்படி கடிதத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிவைத்துள்ளரென, சபாநாயகர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

