Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல்

July 24, 2018
in News, Politics, World
0

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் தேர்தல் பரபரப்புரை முடிவடைந்ததுள்ளது.

மொத்தமாக 10.5 கோடி வாக்காளர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனுடன் சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் ஆகிய 4 மாகாணங்களுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 272 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதில் 137 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் கட்சி ஆட்சியை அமைக்கும். 272 இடங்களில் 70 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டை இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் உலகமே பாகிஸ்தான் நாட்டு பொதுத்தேர்தலை உற்றுநோக்கி வருகிறது.

இந்த தேர்தலில் சிறையிலிருக்கும் நவாஸ் ஷெரீஃபின் முஸ்லீம் லீக் நவாஸ் (பி.எம்.எம்-என்) கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சிக்கும் இடையில் தான் கடும் போட்டி உள்ளது.

இவை தவிர, பிலாவல் புட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதனோடு கூட்டணி வைத்துள்ள முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமால் கட்சியும் தற்போதைய பொதுத்தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

பாகிஸ்தானில் இடைக்கால அரசு ஆட்சி செலுத்தி வரும் நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான இம்ரான் கானின் பிடிஐ, இந்தாண்டு பொதுத்தேர்லில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை தவிர, பிலாவல் புட்டோ சர்தாரியின் கட்சியும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் 5 ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்ததில்லை என்பதே வரலாறு.

ஊழலை ஒழிப்போம், பொருளாதார நிலையில் பாகிஸ்தானை முன்னேற்ற பாதைக்கு உயர்த்துவோம் உள்ளிட்ட தீவிர பிரசாரம் செய்து வரும் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு பெரிய வாய்ப்பு உள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஏற்றவாறு இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் உள்ள நவாஸ் ஷெரீஃபின் பிஎம்எல் கட்சியை சேர்ந்த பலர் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தாவியுள்ளனர். கூடுதலாக சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இராணுவம் உள்ளதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கு பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்களும் எழுந்துள்ளன. இதன் காரணமாக சுமார் 3.7 லட்சம் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 3 வேட்பாளர்கள் உட்பட 180 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் பலர் உயிரிழப்பு

Next Post

கடும் வெப்பம் காரணமாக 65 பேர் பலி

Next Post

கடும் வெப்பம் காரணமாக 65 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures