யாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வில் கலந்து கொள்ளாது ஒப்பமிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தொடர்பில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மாநகர ஆணையாளரிடம் விளக்கம் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வு கடந்த ஜூன் மாதம் 26ம் திகதியும் அதன் தொடர்ச்சி 29ம் திகதியும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்றது. இருப்பினும் குறித்த இரு நாள்களும் சபைக்கு சமூகமளிக்காத ஓர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தினவரவில் ஒப்பமிட்டுள்ளார்.
இவ்வாறு குறித்த உறுப்பினர் ஒப்பமிட்டமை தொடர்பில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், பிராந்திய ஆணையாளர் தற்போது மாநகர ஆணையாளரிடம் இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.இதனால் குறித்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

