ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அமெரிக்காவுக்கு விடுத்திருந்த எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பதிலளித்துள்ளது.
மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டாம். அப்படிச் செய்தால் இதுவரையில் வரலாற்றில் சந்திக்காத பின்னடைவைச் சந்திக்க நேரிடும். கசப்பான சம்பவங்களை அனுபவிக்க வேண்டி வரும். நாம் உங்களது எச்சரிக்கைகளுக்கு தலைகுனியும் நாடு அல்ல. வன்முறைக்கோ, மரணத்துக்கோ நாம் பயப்பட மாட்டோம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரான் ஜனாதிபதி விடுத்திருந்த எச்சரிக்கைக்கே அமெரிக்கா ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சிங்கத்தின் வாலுடன் விளையாட வந்தால் விளைவு மோசமாகும் என ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
